Home தாயகச் செய்திகள் பேரவைத் தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

பேரவைத் தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்!

Share
Share

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது. முன்னதாக குறித்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அறிவித்துள்ளார்.

எனினும், பிரிட்டன் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் ஆதரவுடன் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த பிரேரணையை வாக்கெடுப்புக்குவிடாது ஏற்றுக் கொள்வதாவும் அவர் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படாமல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

மனித உரிமைகள் மீறல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளின் முழுபங்கேற்புடன் பாரபட்சமற்ற முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும், தமிழ் – முஸ்லிம் சமூகங்களை விகிதாசாரமற்ற முறையில் பாதிக்கும் சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்கப்படுதல், கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக்
கொண்டுவர வேண்டும் ஆகிய விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

மேலும், இலங்கையின் உறுதிமொழிகளை பிரிட்டன் பாராட்டியதுடன், வாக்குறுதிகளை உறுதியான நடவடிக்கைகளாக மாற்ற வேண்டும், மனித புதைகுழிகளைத் அகழ்வது, சுயாதீனமான வழக்குத் தொடுப்பு வழிமுறைகள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களைக் கண்காணிப்பதை முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...