முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சலுகைகளைப் பறித்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மாத்தறையில் நடந்த நிகழ்வில் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நிலவும் உலகளாவிய ஊழல் வலையமைப்பைக் ராஜபக்ஷ குடும்பமே கட்டுப்படுத்துகிறது. அவர்களின் சலுகைகளைப் பறித்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
தான் நீதி அமைச்சராக இருந்தால், மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து எடுத்துச் சென்ற பெறுமதியான பொருட்களை 24 மணி நேரத்திற்குள் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்வேன்.
2009 போரின் முடிவு 10 கிலோமீற்றம் தூரத்தில் இருந்தபோது மஹிந்த ராஜபக்ஷ ஏன் போர்நிறுத்தத்தை அறிவித்தார் என்று நாட்டுக்கு விளக்க வேண்டும். அது பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அவர் இந்த முயற்சிகளை மேற்கொண்டார்.
2005 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற விடுதலைப்புலிகளுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்தார்.
நாங்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடுகிறோம், ஆனால் அவர் அவர்களுக்கு பணம் கொடுக்கிறார்.
பயங்கரவாதிகளுக்கு பணத்தை கொடுப்பது தேசத்துரோகம் இல்லையா? மற்ற நாடுகளாயின், மஹிந்த ராஜபக்ஷ கடுமையான தண்டனைக்கு ஆளாகியிருப்பார்.
எமது அரசியலமைப்பின் படியும், அவருக்குரிய தண்டனை தூக்குத் தண்டனையே” என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
Leave a comment