இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவானது, உலகின் மிகச் சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அரங்கில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆணைக்குழுக்களுக்கு வழங்கப்படும் இந்த கௌரவமான விருதை, இலங்கை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka)பெற்றுள்ளது.
தேர்தல் செயற்பாடுகளில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மை, திறன், மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது இலங்கையின் ஜனநாயக செயன்முறைகளுக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
Leave a comment