அரச சேவையின் மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வரியில்லா வாகன அனுமதிகள், எதிர்வரும் பாதீட்டில் மீண்டும் வழங்கப்பட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே வழங்கப்பட்ட சுமார் 23,000 அதிகாரிகளுக்கான அனுமதிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் மேலும் அதிகாரிகள் இந்த வசதிக்குத் தகுதி பெறுகின்றனர்.
எனினும், சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த இலக்கான – ஆண்டு இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு இருப்பு இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்த வசதியை நிறுத்தி வைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, வாகன இறக்குமதி காரணமாக மொத்த அந்நிய செலாவணி வெளியேற்றம் முதல் எட்டு மாதங்களில் 918 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Leave a comment