Home தென்னிலங்கைச் செய்திகள் ரவிராஜ் கொலையுடன் மன்னம்பேரிக்கு தொடர்பில்லை என்கிறது பொதுஜன பெரமுன!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ரவிராஜ் கொலையுடன் மன்னம்பேரிக்கு தொடர்பில்லை என்கிறது பொதுஜன பெரமுன!

Share
Share

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மன்னம்பேரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்லர், அவர் சாட்சியாளர், அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதன் உரையாடல் வடிவம் வருமாறு,

கேள்வி : சிறீ லங்கா பொதுஜன பெர முனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மன்னம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் ஊடக பணிமனையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விடயம் பற்றி என்ன குறிப்பிடுகின்றீர்கள் ?

பதில் : சம்பத் மன்னம்பேரி நடராஜா ரவிராஜ் படுகொலை விவகாரத்தில் சந்தேக நபரல்லர், அவர் சாட்சியாளர். அவருக்கு எதிராக இந்த விடயத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை. இதனை நான் ஆராய்ந்து பார்த்தேன்.

கேள்வி : அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டதன் பின்னரா தேடிப்பார்த்தீர்கள்?

பதில் : இல்லை, ஊடகங்களில் இவ்விடயம் வெளியான பின்னரே ஆராய்ந்து பார்த்தேன்.

கட்சியின் வேட்புமனு வழங்கும்போது சகல உறுப்பினர்களும் சத்திய கடதாசி வழங்கினார்கள். அதில் இவர் இந்த விடயம் பற்றி ஏதும் குறிப்பிட்டிருக்கவில்லை – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...