கேரதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதில், சிறுமி ஒருவர் உயிரிழந்தார். ஏனைய மூவரும் காயங்களுக்கு உள்ளாகினர்.
தென்மராட்சி – மந்துவிலைச் சேர்ந்த எஸ்.தனுஷ்கா என்ற சிறுமியே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment