அனுராதபுரம் – குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் இன்று (25) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் இருந்து பயணித்த வான் ஒன்றே இந்த விபத்தில் சிக்கி இருந்தது.
விபத்தில் காயமடைந்த வானின் சாரதி மற்றும் லொறியின் சாரதி உட்பட 7 பேர் சிகிச்சைக்காக தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வானில் பயணித்த, முல்லைத்தீவு,செம்மலை பகுதியை சேர்ந்த தி.விமலானந்தன் (வயது -38) மற்றும் புதுக்குடியிருப்பு – வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது-29) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது-29) மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த தேனுயன் என்ற இளைஞர்கள் நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த பயணித்தவர்களில் ஏனைய இருவரின் நிலை ஆபத்தாக இருப்பதாக கூறப்படுகின்றது.
வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment