Home தென்னிலங்கைச் செய்திகள் மேலதிக கொடுப்பனவை வழங்குமாறு கோரி அரச சித்த மருத்துவ அதிகாரிகள் போராட்டம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மேலதிக கொடுப்பனவை வழங்குமாறு கோரி அரச சித்த மருத்துவ அதிகாரிகள் போராட்டம்!

Share
Share

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் ஆயுர்வேத மருத்துவர்களுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்கக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அரச சித்த மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரால் நாடளாவிய ரீதியில் மாகாண ரீதியில் சுழற்சி முறையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் இன்று வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் – கைதடி சித்த மருத்துவ வைத்தியசாலைக்கு முன்பாகக் கவனவீர்ப்புப் போராட்டமும் இடம்பெற்றது.

இதன்போது ஆயுர்வேத வைத்தியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேலதிக கொடுப்பனவை உடன் வழங்கு, சம்பள மறுசீரமைப்பு எங்கே, நிர்வாகமே மமதை வேண்டாம், பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தா போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...