Home தென்னிலங்கைச் செய்திகள் நீதி அமைச்சர் ஜெனீவா பயணம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

நீதி அமைச்சர் ஜெனீவா பயணம்!

Share
Share

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறும் காணாமல்போனோர் தொடர்பான குழுவின் இலங்கையின் முதலாவது காலமுறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று புதன்கிழமை பயணமாகின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பாக ஜெனிவாவில் நடைபெறும் இலங்கையின் முதலாவது ஆய்வுக்கூட்டம் இதுவாகும்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையில் இலங்கை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள், அதன் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நீதி அமைச்சர் விளக்கமளிக்கவுள்ளார்.

இந்தக் கூட்டம், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை, குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினையைச் சர்வதேச அரங்கில் விவாதிப்பதற்கு ஒரு முக்கிய தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...