இந்த ஆண்டின் முதல் ஏழு மாத காலப்பகுதியில் சமூக ஊடகங்களில் சைபர் குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 6,512 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (CERT) தெரிவித்துள்ளது.
இந்த முறைப்பாடுகளில் 1,198 முறைப்பாடுகள் நிதி மோசடி தொடர்பானவை என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.
போலியான முகநூல் கணக்குகளை உருவாக்குதல், இணைய பாலியல் துன்புறுத்தல், அவதூறு மற்றும் வட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்தல் ஆகியவையும் இந்த முறைப்பாடுகளில் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment