போதைக்கு அடிமையான இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது
செய்யப்பட்டுள்ளார்.
கைதான 27 வயதான இளைஞர் நீண்ட நாட்களாக ஐஸ்போதைப்பொருளை பயன்படுத்தி வந்துள்ளார்.
அவரை கைது செய்தபோது 36 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் அதனை நுகர்வதற்கான உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஊரெழுவை சேர்ந்த இளைஞரே கோப்பாய் பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று
தெரிவிக்கப்பட்டது.
Leave a comment