Home தாயகச் செய்திகள் மோட்டார் சைக்கிளை மோதிய உழவூர்தி! யாழில் பெண் மரணம்! இளைஞர் படுகாயம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிளை மோதிய உழவூர்தி! யாழில் பெண் மரணம்! இளைஞர் படுகாயம்!

Share
Share

மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உழவு இயந்திரம் மோதியதில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவில் கச்சாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், கெற்பேலி மேற்கு – மிருசுவிலை சேர்ந்த நந்த குமார் ஜெயலக்ஷ்மி (வயது 46) என்பவரே உயிரிழந்தார். கனகலிங்கம் செந்தூரன் (வயது 22) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

குடும்பப் பெண்ணும் அவரின் உறவினருமான இளைஞரும் மோட்டார் சைக்கிளில் கச்சாய் வீதியூடாக கொடிகாமம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

அதே திசையில் பயணித்த மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உழவு
இயந்திரம் மோட்டார் சைக்கிளை மோதியது.

இதில், குடும்பப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த இளைஞர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதேநேரம், விபத்தை ஏற்படுத்திய உழவு இயந்திரம் தப்பிச் சென்றுள்ளது. விபத்துக் குறித்த விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...