காற்றாலை மின்சார திட்டம், கனிம மணல் அகழ்வு என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகம் முன்பாக மன்னார் மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘நமது நாடு – நமது மன்னார் – நமது போராட்டத்தின் கோரிக்கைகள்’ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் 14 காற்றாலை மின்சார கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும். மன்னார் மாவட்டத்தில் எந்தவோர் இடத்திலும் கனிம மணல் அகழ்வுக்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது, அமைக்கப்பட்ட (தம்பபன்னி, நறுவிலிக்குளம்) ஆகிய 2 காற்றாலை உயர் மின் உற்பத்தி திட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை உடன் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் சுமார் 500இற்கும் மேற்பட்டவர்கள் பங்கெடுத் திருந்தனர்.
Leave a comment