Home தென்னிலங்கைச் செய்திகள் ஏழரைக் கோடி ரூபா சொத்துகளை எவ்வாறு ஈட்டினார் விமல் வீரவன்ச? – வழக்கு விசாரணை ஒக்டோபர் 22 இற்கு ஒத்திவைப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஏழரைக் கோடி ரூபா சொத்துகளை எவ்வாறு ஈட்டினார் விமல் வீரவன்ச? – வழக்கு விசாரணை ஒக்டோபர் 22 இற்கு ஒத்திவைப்பு!

Share
Share

சுமார் 7.5 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்ரோபர் 22 ஆம் திகதி எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த விமல் வீரவன்சவும் நீதிமன்றத்தில் முற்பட்டிருந்தார்.

விமல் வீரவன்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமர்ப்பணங்களை முன்வைத்து, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ய நேரம் தேவைப்படுவதாக நீதிமன்றைக் கோரினார்.

இதைக் கருத்தில் கொண்டு, சாட்சி விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அழைக்க உத்தரவிடப்பட்டது.

2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது விமல் வீரவன்ச ஈட்டிய சுமார் ஏழரைக் கோடி ரூபாவுக்கும் அதிகமான சொத்துகளை எவ்வாறு உழைத்தார் என்பதை வெளியிடத் தவறியமைக்காக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...