Home தென்னிலங்கைச் செய்திகள் மரத்தில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த கைதி உயிரிழப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

மரத்தில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த கைதி உயிரிழப்பு!

Share
Share

மரமொன்றில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள பாரிய மரமொன்றில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கைதியே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கைதியே உயிரிழந்துள்ளார்.

இந்தக் கைதி போதைப்பொருள் குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ்  களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

மேற்படி கைதி கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி சிறைச்சாலையில் உள்ள பாரிய மரமொன்றில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் இந்தக் கைதி நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இந்தக் கைதி மீண்டும் சுகவீனமடைந்த நிலையில் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

இது தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...