Home தென்னிலங்கைச் செய்திகள் ஆசிரியர்கள் முன்னெடுத்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஆசிரியர்கள் முன்னெடுத்த உணவுத் தவிர்ப்புப் போராட்டம் நிறைவுக்கு!

Share
Share

தேசிய பாடசாலைகளில் 3 வருடங்களை பூர்த்திசெய்த கல்விசார், கல்விசாரா ஊழியர்களுக்கு, தங்களது பிள்ளைகளை தாங்கள் பணியாற்றும் பாடசாலைகளில் சேர்ப்பதற்கான வாய்ப்பை மீண்டும் வழங்குமாறு ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. 

ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இப்பிரச்சினையை முன்னிறுத்தி கடந்த சில நாட்களாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

இருப்பினும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்து, குறித்த குழுவினர் கல்வி அமைச்சுக்கு சென்றிருந்தனர். 

பின்னர், கல்வியமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடனான பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகக் கூறி கல்வியமைச்சரின் காரியாலயத்துக்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்ததுடன், அவர்களில் சிலருக்கு ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலை நடத்துவதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டது கலந்துரையாடலின் பின்னர் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்தது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...