Home தாயகச் செய்திகள் முப்பது ஏக்கர் காணிகள் கிளிநொச்சியில் விடுவிப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

முப்பது ஏக்கர் காணிகள் கிளிநொச்சியில் விடுவிப்பு!

Share
Share

கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2009 ஆண்டு முதல் படையினர் வசமிருந்த தனியார்கள் மற்றும் அரச காணிகள் கட்டம்  கட்டமாக விடுவிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் தொடர்சியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பொன்னாவெளி  கிராம அலுவலர் பிரிவிலுள்ள 7 ஏக்கர்  காணிகள் இம்மாதம் 7 ஆம் திகதி விடுவிக்கப்பட்டு  பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தக் காணிகள் தற்காலிகமாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பொறுப்பில் கையளிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று நல்லூர் கிராம அலுவலர் பிரிவிலுள்ள முட்கொம்பன்  பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த 20 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள இயக்கச்சிப்   பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...