Home தென்னிலங்கைச் செய்திகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை சிக்கினார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை சிக்கினார்!

Share
Share

சுமார் 10 கிலோகிராமுக்கும் அதிகளவான குஷ் போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க  விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை பயணிகள் வருகை முனையத்தின் ஊடக வெளியேற முற்பட்ட சந்தேகத்துக்கிடமான  பயணி ஒருவரைச் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது அந்த நபரின் பயணப் பொதியினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 10 கிலோ 750 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தினுடாகச் சந்தேகநபர் நாட்டை வந்தடைந்துள்ளார்.

கைதான நபர் 24 வயதுடைய இந்தியப் பிரஜை என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விமான நிலையப் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...