Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசின் நோக்கம் – ஜெனிவாவில் இந்தியா விடுத்த கோரிக்கைக்கு நளிந்த இப்படி பதில்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசின் நோக்கம் – ஜெனிவாவில் இந்தியா விடுத்த கோரிக்கைக்கு நளிந்த இப்படி பதில்!

Share
Share

“மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதே அரசின் எதிர்பார்ப்பாக உள்ளது.” – என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்த வேண்டும் என்று ஜெனிவாக் கூட்டத் தொடரில் இந்தியா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதவாது:-

“குறித்தொகுக்கப்பட்ட காலத்தில் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் கால எல்லை பற்றி எனக்கு உறுதியாகக் கூற முடியாது. அதற்குரிய சட்டதிருத்தங்களை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனினும், கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும்.” – என்றார்.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,

“அந்தச் சட்டம் நிச்சயம் நீக்கப்படும். அதற்குரிய நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. நிகழ்நிலை காப்புச் சட்டமும் மறுசீரமைக்கப்படும்.” – என்றார் .

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...