யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திப் பகுதியில் இன்று புதன்கிழமை ஒரு சைக்கிளும், 4 மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் பகுதியில் , வீதியின் மறுபக்கத்துக்குச் சைக்கிளைத் திருப்ப முற்பட்டவருடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி, நிலைதடுமாறி எதிரே வந்த 3 மோட்டார் சைக்கிள்களுடன் மோதியுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஒரு சைக்கிளும், 4 மோட்டார் சைக்கிள்களும் ஒன்றுடன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளன. அவற்றில் பயணித்த அனைவரும் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளைச் சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment