ஆரம்பப் பேச்சுகளின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியானது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் செயற்படுவதற்காகக் குழுவொன்றாகவோ அல்லது அதற்கு நிகரான பொறிமுறையாகவோ இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.
பொதுக் காரணிகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் கடந்த வாரங்களில் ஐக்கிய தேசியக் கட்சி பல கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.
அந்தக் கலந்துரையாடல்களில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய முன்வைக்கப்பட்ட காரணிகளைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது என்று அந்தக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தியுடன் வெளிப்படையாக இணைந்து செயற்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று வஜிர அபேவர்தன மேலும் கூறினார்.
Leave a comment