Home தாயகச் செய்திகள் அரசியல் கைதிகளின் விடுவிப்பை வலியுறுத்தி காசியிலிருந்து யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்ட விடுதலை நீர்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுவிப்பை வலியுறுத்தி காசியிலிருந்து யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்ட விடுதலை நீர்!

Share
Share

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது.

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டது.

அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச் சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில் நேற்று வியாழக்கிழமை காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது.

இந்த நீர் சேகரிப்பு நிகழ்வானது சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது.

இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பெரும்பாலான கைதுகள் அரசியல் கண்காட்சிகள் என்கிறது ஐ.தே.க!

நாட்டில் நடைபெறும் கைதுகளில் பெரும்பான்மையானவை அரசியல் கண்காட்சிக்காகவே நடக்கின்றன. கைதாகும் 100 பேரில் 98 பேர்...

தையிட்டியில் போராட்டம்!

தையிட்டியில் தனியாரின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையைஅகற்ற வலியுறுத்தி நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு பௌர்ணமி...

இந்த ஆண்டில் 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைக்க நடவடிக்கை – ஜனாதிபதி!

இந்த ஆண்டு புதிதாக 62 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது...

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று தொடக்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை முற்பகல்...