எம்.வி.சன்சி 15 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற தமிழர் வரலாற்று பொது அறிவுப்போட்டியும் கண்காட்சியும் பிரிட்டிஸ் கொலம்பியா மகாணத்தில் உள்ள வேனவி நகரில் இன்று (30-08-2025) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் SUKHMAN GILL
கலந்து கொண்டு சிறப்பித்ததோடு எதிர்க்கட்சித்தலைவரின் வாழ்த்துச்செய்தியினை நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கியிருந்தார்.
பொதுஅறிவுப்போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு கைலாகு கொடுத்து பாராட்டியதுடன் முதல் மூன்று இடங்களையும் பெற்ற ஒன்பது இளையோர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி மதிப்பளித்தார்.
1956 ஆம் ஆண்டிலிருந்து நேற்று வரை நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய ஒளிப்படங்களை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளதை சிறப்பு விருந்திரான பாராளுமன்ற உறுப்பினருக்கு காண்பிக்கப்பட்டது.







Leave a comment