இறுதிப்போரில் களத்தில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் டொரொன்டோவில் நாளை (30-08-2025) நடைபெறவுள்ளது.
சுரேன் கார்த்திகேசு 2009ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முல்லைத்தீவின் வலைஞர் மடத்திற்கும் இரட்டைவாயக்காலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பணி நிமிர்த்தம் சென்றபோது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் சிக்கி படுகாயம் அடைந்திருந்தார்.
போரின் பின்னர் தாய்லாந்திலிருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மூலம் அகதியாக கனடாவைச் சென்றடைந்துள்ளார்.
கடல் பயணத்தின் போது, ஏற்கனவே அடைந்திருந்த காயத்தின் பாதிப்புக்களாலும் கப்பலில் போதிய மருத்துவ வசதிகள் இன்மையாலும் உயிராபத்தினையும் எதிர்கொண்டிருந்தார்.
ஏற்கனவே வன்கூவரில் வெளியாகியிருந்த குறித்த நூல் அறிமுக நிகழ்வுகள் ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்றிருந்தன.
இந்நிலையில்,
நாளை (30-08-2025) பிற்பகல் 5.30 மணிக்கு Scarborough Village Recreation Centre, 3600 Kingston Rd, Scarborough ON, M1M 1R9 என்னும் முகவரியில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
Leave a comment