கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்காக நவம்பர் 6 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
நீதிவான் த. பிரதீபன் முன்னிலையில் நடந்த வழக்கு விசாரணையின்போது, புதைகுழியில் இருந்து மீட்கப் பட்ட சான்று பொருட்கள் தொடர்பில் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்கான விளம்பரங்கள் காணாமல் போனோர் பணிமனையால் ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்றும் இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவை எனவும் கோரப்பட்டது.
இதற்கு அமைவாக குறித்த வழக்கு நவம்பர் 6 ஆம் திகதிக்கு நீதிவானால் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னணி கொக்குத்தொடுவாய் மனித புதை குழி 2023 ஜீ_ன் மாதம் 29ஆம் தேதி அடையாளம் காணப்பட்டது. குடிதண்ணீர் விநியோகத்துக்காக குழாய் பொருத்துவதற்காக கிடங்கு வெட்டிய போது இந்தப் புதைகுழி வெளிப்பட்டது.
ஜூலை 6ஆம் திகதி அகழ்வு பணிகள் ஆரம்பமாகின. 52 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் அகழ்வு பணி நிறைவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment