Home தென்னிலங்கைச் செய்திகள் ராஜித தொடர்ந்தும் தலைமறைவு – சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரி நீதிமன்றில் மனு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ராஜித தொடர்ந்தும் தலைமறைவு – சொத்துக்களைப் பறிமுதல் செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

Share
Share

கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
 
கொழும்பு பிரதான நீதிவானிடம் நேற்று இந்த மனுவைத் தாக்கல் செய்த இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, ராஜித சேனாரத்னவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யக் கோரியுள்ளது.  
 
முன்னதாக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த சமர்ப்பிப்புகளைத் தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் ராஜித சேனாரத்னவைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பித்தது.
 
இந்தநிலையில் அவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரது தொலைபேசி இணைப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
அத்துடன் அவர் வேண்டுமென்றே கைது செய்வதைத் தவிர்த்து வருகின்றார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...