முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி எதிர்க்கட்சியினர் மற்றும் ரணிலின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“அடக்குமுறைக்கு எதிராக” என்ற பெயரில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “அநுர கோ ஹோம்” என்று விண்ணதிரக் கூச்சலிட்டனர்.
இதனால் கோட்டை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தால் கொழும்பு கோட்டை முதல் லேக் ஹவுஸ் நிறுவனத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் கொம்பனி வீதி உள்ளிட்ட பல வீதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.



Leave a comment