முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது இருக்கும் முன்னாள் ஜனாதிபதி, சூம் (zoom) தொழில்நுட்பம் மூலம் விசாரணையில் இணைந்திருந்தார்.
அவர் பல்வேறு நோய்ப்பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவரை பிணையில் விடுவிக்குமாறு அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment