Home தாயகச் செய்திகள் கொடிகாமம் பகுதியில் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கொடிகாமம் பகுதியில் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவைகள் மீட்பு!

Share
Share

யாழ். கொடிகாமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நீர் குழாய்களை மண்ணில் புதைக்கும் பணிகளுக்காக நிலத்தை அகழ்ந்தபோது வெடிக்காத நிலையில் ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

குழாய்களைப் புதைப்பதற்காக நிலத்தை அகழ்ந்து போது சந்தேகத்துக்கிடமான முறையில் உரைப் பை ஒன்று காணப்பட்டதையடுத்து, கொடிகாமம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்த உரைப்  பையை மீட்டு சோதனையிட்ட போது அவற்றுக்குள் வெடிக்காத நிலையில் துப்பாக்கி ரவைக் கோர்வைகள் காணப்பட்டன.

அவற்றை மீட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்ற பொலிஸார், அவற்றுள் 1393 துப்பாக்கி ரவைகள் காணப்படுகின்றன எனவும், அவற்றை நீதிமன்றத்தில் பாரப்படுத்தி நீதிமன்ற உத்தரவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...