Home தென்னிலங்கைச் செய்திகள் உலக முயற்சியாளர் தினத்தையொட்டி வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

உலக முயற்சியாளர் தினத்தையொட்டி வவுனியாவில் விழிப்புணர்வுப் பேரணி

Share
Share

உலக முயற்சியாளர் தினத்தை முன்னிட்டு வவுனியா பல்கலைக்கழகத்தின் முயற்சியாண்மை கற்கைகள் பிரிவின் மாணவர்கள் இணைந்து இன்று சனிக்கிழமை விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.

இலங்கையின் முயற்சியாளர்களின் பொருளாதார மேம்பாடு இலங்கைக்கு முக்கியமான ஒரு விடயமாகக் கருத்தில் கொண்டு உலக முயற்சியாளர் தினத்தை அனுஷ்டிக்கும் முகமாகவும் எதிர்வரும் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் வவுனியா பல்கலைக்கழகத்தில் புத்தாக்கம் வர்த்தகக் கண்காட்சி மற்றும் வர்த்தகச் செயற்பாடுகள் தொடர்பான கருத்தரங்குகள் இடம்பெறுகின்ற நிலையிலேயே இந்த விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் பூங்கா வீதியில் உள்ள வெளிவாரிகள் கற்கைகள் பிரிவில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் வவுனியா நகர் வழியாகச் சென்று மீண்டும் வெளிவாரி கற்கைககள் பீடத்தை வந்தடைந்ததது.

இதன்போது பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அ.அற்புதராஜா, வியாபாரக் கற்கைகள் பீட விரிவுரையாளர்கள் மாணவர்கள் உட்படப்  பலரும் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மீண்டும் தேர்தலில் களமிறங்குவேன் என்கிறார் சஜித்!

மீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுமாயின் அப்போதும், தாமே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர்...

குற்றச் செயல்களுக்கு முடிவு கட்ட புதிய சட்டம் கட்டாயம் வேண்டும் – பொலிஸ்மா அதிபர் பிரியந்த வலியுறுத்து!

“குற்றச் செயல்களை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் புதிய சட்ட ஏற்பாடுகள் மிகவும் அவசியம்.” – இவ்வாறு புதிய...

மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் நேற்று மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சங்கரத்தை – துணவி...

கொழும்பில் அமெரிக்க கடற்படைக் கப்பல்!

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்எஸ் சண்டா பார்பரா (USS Santa Barbara) என்ற கப்பல் விநியோக...