Home தாயகச் செய்திகள் மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு!

Share
Share

மட்டக்களப்பு, கொக்குவில் – சவுக்கடி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பகுதியிலுள்ள உறவினரது தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் பணியாற்றும் 34 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறியவர் இரவாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரைத் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று சவுக்கடி கடற்கரைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுகின்றது என்று பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரும், தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவ இடத்தில் உயிரிழந்தவரின் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...