Home தென்னிலங்கைச் செய்திகள் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்குஇலங்கைக்கு ஆஸி. உதவி வழங்க வேண்டும்- அந்நாட்டு ஆளுநர் நாயகத்திடம் சஜித் கோரிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்குஇலங்கைக்கு ஆஸி. உதவி வழங்க வேண்டும்- அந்நாட்டு ஆளுநர் நாயகத்திடம் சஜித் கோரிக்கை!

Share
Share

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தேவையான ஆதரவை – உதவியை ஆஸ்திரேலியாவிடம் இருந்து பெற்றுத் தருமாறு அந்நாட்டு ஆளுநர் நாயகத்திடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டினுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு கொழும்பிலுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. இதன்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு கோரிக்கையை விடுத்தார்.  

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் அங்கு நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற நிகழ்வின்போதே மேற்படி இருவரும் இவ்வாறு சந்தித்துக் கலந்துரையாடினர்.

ஆஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலே நிலவி வரும் நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி இங்கு சுமுகமான உரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஈடுபட்டார்.

இலங்கை ஏற்றுமதி சார்ந்த பொருட்களுக்கு ஆஸ்திரேலியாவில் அதிக சந்தை வாய்ப்புகளைப் பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது கோரிக்கை விடுத்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...