Home தென்னிலங்கைச் செய்திகள் சட்டச் சிக்கல் நீக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை – தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சட்டச் சிக்கல் நீக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல் இல்லை – தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவிப்பு!

Share
Share

“மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பாக அரசமைப்பு ரீதியில் ஏற்பாடு காணப்பட்டிருப்பினும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இன்று வரை நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைக்காததால் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் சட்டச் சிக்கல் காணப்படுகின்றது. எனவே, அந்தச் சட்டச் சிக்கல் நீக்கப்படும்போது தேர்தல்கள் ஆணைக்குழுவானது மாகாண சபை தேர்தலை நடத்த எந்தச் சந்தர்ப்பத்திலும் தயாராக இருக்கின்றது.” இவ்வாறு தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சட்டத்தரணி எம்.பி.எம். சுபியான் தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பு மூலோபாயத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதன்போது கலந்துகொண்ட தேர்தல்கள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

மக்களின் வாக்களிப்பு பங்கேற்பை அதிகரித்தல், தேர்தல் சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சுதந்திரமான – நியாயமான தேர்தலை உறுதி செய்தல், அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேர்தல் முறையில் காணப்படும் சில குறைபாடுகளை நீக்கி புதிய சட்ட திட்டங்களைக் கொண்டு வருதல், நவீன தொலைத்தொடர்பு வசதிகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் தேர்தல் மற்றும் வாக்காளர் இடாப்புக்குப் புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இதில் அரச அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் கண்காணிப்புச் செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் கலந்துகொண்டு பங்களிப்பு மூலோபாய எதிர்காலத் திட்டம் (2026-2029) தொடர்பான தமது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைத்தனர்

இந்நிகழ்வில் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் கே.ஜே.எஸ்.மாதவ, திட்டமிடல் பணிப்பாளர் சன்ன பி.டி. சில்வா மற்றும் தேர்தல் அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணிப் புதைகுழி குறித்த விசாரணைக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு!

“யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்கு அரசு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை. மாறாக தேவையான...

தேசபந்துவைப் பதவி நீக்குகின்றகடிதத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

தேசபந்து தென்னக்கோனைப் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஒப்புதல்...

செம்மணியில் இன்றும் 6 மனித எலும்புக்கூடுகள் – இதுவரை 147 அடையாளம்; இன்றுடன் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அகழ்வின் போது புதிதாக 6 மனித...

மின்சாரம் திருத்தச் சட்டமூலம் சபையில்96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. இன்று...