Home தாயகச் செய்திகள் துப்பாக்கி ரவைகளுடன் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் உட்பட இருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

துப்பாக்கி ரவைகளுடன் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் உட்பட இருவர் கைது!

Share
Share

கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21 ஆம் திகதி கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பில் இருந்து வருகை தந்த புலனாய்வுத்துறை அதிகாரிகளோடு வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸாரும் இணைந்து செட்டிகுளம், துட்டுவாகை மற்றும் நேரியகுளம் பகுதிகளில் உள்ள இரு வீடுகளில் சோதனையை மேற்கொண்டனர்.

இதன்போது, நேரியகுளத்தில் வீடு ஒன்றின் அருகாமையில் பிளாஸ்டிக் பரல் ஒன்றினுள் 86 கைக்குண்டுகள் ரி – 56 ரக துப்பாக்கிக்கான ரவைகள், கைத்துப்பாக்கிக்கான மூன்று ரவைகள், 5 ஆயிரத்து 600 போதை மாத்திரைகள், 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன நிலத்தின் கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டதுடன், செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

ஒட்டுசுட்டானில் ஒருவர் அடித்துக் கொலை!

தலையின் பின்புறத்தில் காயத்துடன் குடும்பஸ்தர் ஒருவர் ஒட்டுசுட்டானில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த நபர் சைக்கிளில் சென்று...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...