Home தாயகச் செய்திகள் சித்துபாத்தி மனிதப் புதைகுழி; சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

சித்துபாத்தி மனிதப் புதைகுழி; சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை!

Share
Share

அரியாலை மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்ற புலனாய்வுப் பிரிவின் மனிதகொலை விசாரணைப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி யாழ்.நீதவான் நீதிமன்றில் செய்த விண்ணப்பபத்தின் பிரகாரம் சான்றுப் பொருட்களை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 05 மணி வரை அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மக்களின் பார்வைக்காக சான்றுப்பொருட்கள் வைக்கப்படவுள்ளன.

அரியாலை புதைகுழிகளில் இருந்து இதுவரை புத்தகப் பை , சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பால் போச்சி, வளையல்கள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் மீட்கப்பட்டு அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அவற்றினைப் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி, அவற்றை அடையாளப்படுத்தக் கூடியவர்கள் நீதிமன்றுக்கோ, குற்றப் புலனாய்வுத் துறையினருக்கோ
தெரிவிப்பதன் ஊடாக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை சான்றுப் பொருட்களை பார்வையிட வருவோருக்கான கட்டுப்பாடுகள், நடைமுறைகள் தொடர்பில் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...