பாடசாலைக்கு சகோதரனை ஏற்றச் சென்ற மாணவி காணாமல் போயுள்ளதாக தாயார்
யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம், செல்லர் வீதியில் வசிக்கும் மாணவியான 17 வயதுடைய தனது மகளைக் கடந்த 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என தாயார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தனது சகோதரனை அழைத்து வருவதற்காக வீட்டிலிருந்து நண்பகல்வேளை மாணவி வழமைபோன்று சென்றுள்ளார். ஆனால், அவர் பாடசாலைக்கு சென்று மகனை ஏற்றிவரவில்லை. அத்துடன், வீட்டுக்கும் வரவில்லை.
இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்தேன். ஆனால் இரு வாரங்கள் ஆகியும் மகள் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை – என்றார்.
Leave a comment