Home தென்னிலங்கைச் செய்திகள் மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்தல்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்தல்!

Share
Share

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும் நியாயமான
தேர்தலுக்கான மக்கள் செயல்பாட்டு அமைப்பு (பவ்ரல்) அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் பவ்ரல் அமைப்பு இந்த விடயத்தை கோரியுள்ளது.

கடந்த 2014 செப்ரெம்பர் 20 ஆம் திகதியுடன் மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளநிலைமை கவலைக்குரியதாக அமைந்துள்ளது என பவ்ரல் அமைப்பு
தெரிவித்துள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒருமுறை தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றாலும், பிந்தைய அரசுகள் இதற்குத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாமதம், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடையே பெரும் அக்கறையை ஏற்படுத்தியுள்ளது என்றும், மாகாண மட்டத்தில் தேர்தல் நடைமுறையை மீட்டெடுக்கவேண்டிய அவசியம் அதிகரித்துள்ளதாகவும் பவ்ரல் கூறியுள்ளது.

தேர்தல்களை நடத்தத் தவறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத் தத்துவங்களுக்கும் எதிரானது என பவ்ரல் எச்சரித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சிறிதரன் எம்பியின் பதவி பறிக்கப்பட்டு சாணக்கியனிடம் கையளிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக மக்கள் திரண்டு போராட்டம்!

வவுனியா வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நெடுங்கேணியில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில்...

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – மனோ கணேசன் குற்றச்சாட்டு!

‘காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, அதிகார பகிர்வு காணாமல் போனோர் பற்றிய பணிமனையின் மேம்பட்ட...

நிபந்தனைகளின்றி இலங்கைக்கு உதவி – இந்தியத் தூதுவர் தெரிவிப்பு!

பொறுப்புணர்வு மற்றும் சிறந்த அயலுறவு கொள்கையின் அடிப்படையில், எந்தவித நிபந்தனைகளுமின்றி இலங்கைக்கான இந்தியாவின் உதவிகள் முன்னெடுக்கப்படுவதாக...