Home தென்னிலங்கைச் செய்திகள் அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அடுத்த வருடம் மாகாணசபைத் தேர்தல்!

Share
Share

மாகாண சபைகளுக்கான தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு
உத்தேசிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தரப்பு தெரிவித்
துள்ளது. எதிர்வரும் 3 அல்லது 4 வருடங்களுக்குத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என, தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தாக கூறி, ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே, ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல், உள்ளூராட்சி சபைகள் தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், மாகாண சபைகள் தேர்தலும் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்தநிலையில், சமன் சிறி ரத்நாயக்கவின் கருத்து அரசியல் தரப்பில் கேள்விகளை
எழுப்பியிருக்கிறது இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு வினவியபோது- இதற்குப் பதிலளித்த அவர், தேர்தல்கள் ஆணைக்குழு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்குத் தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.

எனினும், சட்டச் சிக்கல்கள் தடையாக உள்ள நிலையில் அதனை பாராளுமன்றத்தினூடாக நிவர்த்திப்பதாக அரசாங்கமும் உறுதியளித்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறித்த கருத்தை வெளியிட்டிருப்பார் என, தாம் நம்பவில்லை என அந்த உயரதிகாரி குறிப்பிட்டார்.

த்துடன், ஆணைக்குழுவின் தலைவரைத் இது தொடர்பில் நேற்றுக் காலை தொடர்பு கொண்டு கேட்ட போது, தாம் தேர்தல்கள் நடத்தப்படாது என்ற கருத்தை வெளியிடவில்லை என்றும், தவறாகப் பகிரப்படும் இந்த செய்திக்கான மறுப்பைத் தாம் ஊடகங்களுக்கு வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக குறித்த உயரதிகாரிகூறினார்.

தேர்தல்கள் ஆணைக்குழு என்ற வகையில் தாம் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...