Home தென்னிலங்கைச் செய்திகள் எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை! – அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

எமது அரசை வீழ்த்தக்கூடிய வலுவான எதிரணி இல்லை! – அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

Share
Share

“நாட்டில் இன்று பல உதிரிகளாகப் பிரிந்து எதிரணிகள் வங்குரோத்து அடைந்துவிட்டன. வலுவான எதிரணி என்று தற்போது ஒன்றும் இல்லை.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி உரிய வகையில் நிறைவேற்றி வருகின்றார். அனைத்து உறுதிமொழிகளையும் 24 மணிநேரத்துக்குள் நிறைவேற்றிவிட முடியாது. கட்டம் கட்டமாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான புரிந்துணர்வு மக்களுக்கு உள்ளது.

அரசின் பயணம் மிகச் சிறப்பாகவே சென்றுகொண்டிருக்கின்றது. ஆனால், எதிரணிகள்தான் வங்குரோத்து அடைந்துள்ளன. இன்று பலமான எதிரணி என்று ஒன்றும் இல்லை. அதனால்தான், அரசுக்கு எதிராகப் போலிப் பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன.

மக்களின் பணத்தைக் கொள்ளையிட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களைப் பிடிக்கும் நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...