Home தென்னிலங்கைச் செய்திகள் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சிலர் விரைவில் சிறைக்குள்! – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: சிலர் விரைவில் சிறைக்குள்! – அமைச்சர் நளிந்த தெரிவிப்பு

Share
Share

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியாகாத பல தகவல்கள் அண்மைக்கால விசாரணைகளில் தெரியவந்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்த மட்டத்தில் உள்ளன என்று அமைச்சர் நளிந்தவிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா உட்பட தேவையான நபர்களை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு இராஜதந்திர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விடயத்தில் சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இதுவரையில் வெளிவராத பல தகவல்கள் விசாரணைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அவற்றின் ஒரு பகுதியையே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார்.

விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம். விசாரணைகள் இன்னும் நிறைவுபெறவில்லை. அது விரைவுபடுத்தப்பட்டு, நீதிமன்றம் ஊடாக உரிய நடவடிக்கை இடம்பெறும்.” – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...