Home தாயகச் செய்திகள் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கு முழுமையாகத் தெரியும் – அரசாங்கம் அறிவிப்பு!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் பிள்ளையானுக்கு முழுமையாகத் தெரியும் – அரசாங்கம் அறிவிப்பு!

Share
Share

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முழுமையாக அறிந்திருந்தமை தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், ஏப்ரல் 21 தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தமையை அவர் முழுமையாக அறிந்திருந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடைபெற்று வருகிறது.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் இந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்திருந்தார்.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டு மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமைக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுக்கும் தொடர்புள்ளதென அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

மேலும் ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் சனல் 4 ஊடகத்திற்கு பல தகவல்களை வழங்கிய பிள்ளையானின் நெருங்கிய சகாவான அசாத் மௌலானாவை நாட்டிற்கு அழைத்துவந்து விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...