Home தென்னிலங்கைச் செய்திகள் அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!

Share
Share

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி சேகரிப்பது தொடர்பில் கல்வியமைச்சு கவனம் செலுத்தி வருவதாக பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்க பாடசாலைகளில் இவ்வாறு மாணவர்களிடம் நிதி சேகரிக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாடசாலைகளில் நிதி சேகரிக்கப்படுவதாக கூறப்படும் முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்கப்படவுள்ளது.

பாடசாலைகளில் நடைபெறும் உற்சவங்களுக்காக அவ்வாறு மாணவர்களின் பெற்றோர்களிடம் நிதியைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என கல்வியமைச்சு ஏற்கெனவே சுற்று நிருபம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ள நிலையிலும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.

அதனை ஆராய்வதற்காகவே குழுவொன்று நியமிக்கப்படுவதாகவும்
எவ்வாறாயினும், அரசாங்க பாடசாலைகளில் மாணவர்களிடம் பல்வேறு நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிப்பது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...