நாட்டில் வருடாந்தம் 33 ஆயிரம் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இவர்களில், 800 பேர் சிறுவர்களாவர் என்று சுகாதார அமைச்சர்
நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனைக்கு 5 மாடி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அங்கு, உரையாற்றுகையிலேயே அவர்மேற்கண்டவாறு கூறினார்.
வருடாந்தம் மஹரகம தேசிய வைத்தியசாலையில் 11 ஆயிரம் புற்றுநோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர். புற்று நோய் சிகிச்சைக்கான உபகரணங்களை மருத்துவ மனைகளுக்கு தொடர்ச்சியாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது – என்றும் அவர் சொன்னார
Leave a comment