கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் செய்தியாளராக பணியாற்றிய ந.கிருஷ்ணகுமார் இன்று உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
90களின் இறுதிக் காலம் தொடக்கம் புலிகளின்குரல் வானொலியின் செய்தியாளராக இணைந்த கிருஷ்ணகுமார் போர் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் வானொலியின் அலுவலக செய்தியாளராகப் பணியாற்றியிருந்தார்.
போர் மிகத் தீவிரம் பெற்றிருந்தபோதும் கிருஷ்ணகுமார் களச் செய்தி சேகரிப்பில் தயக்கமின்றிச் செயற்பட்டிருந்தார்.
வானொலியில் ஒலிபரப்பாகிய ஊர்சுற்றும் ஒலிவாங்கி நிகழ்ச்சிக்காக ஏராளமான நேர்காணல்களை பதிவு செய்திருந்தார்.
போருக்குப் பின்னரும் தினக்குரல், வலம்புரி, தமிழ்மிரர் உட்பட்ட ஊடகங்களுக்கான செய்தியாளராகவும் பணியாற்றியிருந்தார்.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் என்றும் அவருடைய இறுதிச் சடங்கு அக்கராயனில் உள்ள அவருடைய இல்லத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment