அரியாலை – சித்துப்பாத்தி (செம்மணி அருகே) மனிதப் புதைகுழி அகழ்வில் நேற்றைய தினம் பொம்மை ஒன்றும் சிறுவருக்கான காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் சில எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அரியாலை மனிதப்புதைகுழியில் இரண்டாம் கட்டமாக ஆறாவது நாளாகவும் நேற்றைய தினம் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது, கடந்த ஞாயிற்றுக் கிழமை அடையாளம் காணப்பட்ட புத்தகப்பை என்று நம்பப்படும் நீல நிறபை மீட்கப்பட்டது. இதன் கீழ் பொம்மை ஒன்றும் Bata என்று பொறியிடப்பட்ட சிறுவருக்கான காலணி ஒன்றும் மீட்கப்பட்டன.
மேலும், தொடர்ந்த அகழ்வில் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அவை சிக்கலான நிலையில் காணப்படுவதால் அவற்றின் எண்ணிக்கையை நிபுணர்களால் கணிப்பிட முடியவில்லை. மீட்கப்பட்ட பின்னரே சரியான எண்ணிக்கையை கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதேசமயம், கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை செம்மணி அகழ்வில் 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினமும் அகழ்வுப்பணி தொடரவுள்ளது.
Leave a comment