Home தாயகச் செய்திகள் கிழக்கில் சிறார் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

கிழக்கில் சிறார் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

Share
Share

கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சம்பந்தப்பட்ட துஷ்பிரயோக வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

2024ஆம் ஆண்டில் 304 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மூத்த டி.ஐ.ஜி. வருண ஜெயசுந்தர சுட்டிக்காட்டினார்.

ஒரு சம்பவம் நடந்த பின்னரே சுமார் 90% சிறுவர்கள் பாதுகாப்பற்றவர்களாகக் கண்டறியப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

அம்பாறை மாவட்டத்தில், மொத்தம் 101 குழந்தைகள் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

இது பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் குழந்தைகள் தொடர்ந்து சுரண்டப்படுவதை எடுத்துக்காட்டுகிறது.

பெரும்பாலான சம்பவங்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என்று குறிப்பிட்ட டி.ஐ.ஜி ஜெயசுந்தர, பெற்றோர்கள் தங்கள் சிறுசர்களை பாதுகாப்பதில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...