Home தாயகச் செய்திகள் வடக்கு தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது!
தாயகச் செய்திகள்

வடக்கு தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது!

Share
Share

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இ.போ.ச துறைசார் தரப்பினருக்கு உறுதி வழங்கியதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (02) முன்னெடுக்கவிருந்த சேவை முடக்க போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் சட்டவிரோத அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்தும், அவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தி தனியார் பேருந்துகளின் பாதுகாப்பான சேவையை உறுதி செய்வதற்காகவும் செவ்வாய்க்கிழமை (02) வடக்கில் சேவை முடக்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்து இருந்தோம்.

ஆனால் தற்போது இ.போ.சபை, வடக்கின் ஆளுநர் மற்றும் துறைசார் தரப்பினர் இனி வரும் காலங்கலில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென்று வழங்கிய உத்தரவாதத்துக்கு அமைய குறித்த போராடம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சர்வதேசத் தரத்தில் அமையவேண்டும் – இலங்கை அரசுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்!

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்பதற்கான வரைவிலக்கணத்தை சர்வதேச தரத்திற்கு அமையக்...