Home தாயகச் செய்திகள் அணுசக்தி கதிர்வீச்சு கண்காணிப்பு மையங்களை வடக்கு – கிழக்கில் நிறுவ நடவடிக்கை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

அணுசக்தி கதிர்வீச்சு கண்காணிப்பு மையங்களை வடக்கு – கிழக்கில் நிறுவ நடவடிக்கை!

Share
Share

அணுசக்தி விபத்தின்போது நாட்டுக்கு ஏற்படும் கதிர்வீச்சு விளைவுகளை கண்காணிக்கக்கூடிய  முற்கூட்டிய எச்சரிக்கை கட்டமைப்பை நிறுவ அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

அணுசக்தி முகவர் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, கற்பிட்டி ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்புகள் நிறுவப்படவுள்ளன என்று  இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆய்வு மற்றும் அமுலாக்க பிரிவின் பணிப்பாளர் பிரகீத் கடதுன்ன தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள கடற்படை முகாம்களை கேந்திரமாக கொண்டு இந்த 5 இடங்களில் இந்த அமைப்புகள் நிறுவப்படவுள்ளன. இந்த கட்டமைப்பின் ஊடாக நாட்டுக்கு அருகிலுள்ள நாடுகளில் உள்ள அணுசக்தி நிலையங்களில் ஏற்படும் இயற்கையான அல்லது செயற்கை விபத்துகளின்போது நாட்டுக்குள் வரும் கதிர்வீச்சை அவதானிக்க முடியும் – என்றும் தெரிவிக்கப்பட்டது

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...