Home தென்னிலங்கைச் செய்திகள் கொழும்புத் துறைமுக கொள்கலன் விவகாரம் முடிவுக்கு வந்தது!
தென்னிலங்கைச் செய்திகள்

கொழும்புத் துறைமுக கொள்கலன் விவகாரம் முடிவுக்கு வந்தது!

Share
Share

கொழும்பு துறைமுகத்தில் இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்டிருந்த நெரிசல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நாட்கள் எடுக்க வேண்டியிருந்தது என்றும் இறக்குமதி கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணம் எனவும் மேலதிக சுங்கப் பணிப்பாளரும் சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

ஒரு நாளில் சுமார் 1,200 இறக்குமதி கொள்கலன்கள் வந்த நிலையில், சில நாட்களில் இது 2 ஆயிரத்து 900ஆக உயர்ந்தது. இதனால், இறக்குமதி கொள்கலன்களை அனுமதிப்பதற்கு கூடுதல் நேரம் எடுக்க வேண்டியிருந்தது.

எவ்வாறாயினும், இன்று (நேற்று) காலை நிலவரப்படி இந்த தாமதம் முற்றிலும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய அனைத்து கொள்கலன்களும் சுங்கத்தால் அனுமதிக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் – IMF பணிப்பாளர்!

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் இலங்கை வெளிப்படுத்திய செயலாற்றம் ஒரு வெற்றிக்கதையாகும் எனத் தெரிவித்துள்ள...

கிவுல் ஓயாத் திட்டத்தை அரசியலாக்கவேண்டாம் என்கிறது அரசாங்கம்!

‘கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசுக்கு எவ்வித இனவாத நோக்கமும் கிடையாது. முல்லைத்தீவு மற்றும் வவுனியா...