Home தாயகச் செய்திகள் காணாமல் போனோர் அலுவலத்தில் அமைச்சின் தலையீடு எதற்கு? – மன்னிப்புச் சபை கேள்வி!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

காணாமல் போனோர் அலுவலத்தில் அமைச்சின் தலையீடு எதற்கு? – மன்னிப்புச் சபை கேள்வி!

Share
Share

காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட உள்ளகக் கட்டமைப்புக்கள் உண்மையிலேயே சுயாதீனமானவை எனின், அவை வெளிவிவகார அமைச்சின் தலையீடு இன்றி ஆணையாளர் வோல்கர் டர்க்கை தனியாகச் சந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்க
வேண்டும் அல்லவா? என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன் பத்திரண கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கடந்த செவ்வாய்க் கிழமை நீதியமைச்சு, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பொறுப்புக்கூறலுக்கான உள்ளகப் பொறிமுறை மற்றும் நல்லிணக்க செயன்முறை குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பு தொடர்பில் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப் பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன் பத்திரண, காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட உள்ளகக்
கட்டமைப்புக்கள் உண்மையிலேயே சுயாதீனமானவை எனின், அவை வெளிவிவகார அமைச்சின் தலையீடு இன்றி ஆணையாளர் வோல்கர் டர்க்கை தனியாகச் சந்திப்பதற்கு இடமளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாறாக வெளிவிவகார அமைச்சு அல்லது நீதியமைச்சு உள்ளடங்களாக அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நிகழக்கூடிய சந்திப்பில் தமது கட்டமைப்புக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஆதரவு குறித்தோ அல்லது போதியளவு ஆதரவு வழங்கப்படாமை குறித்தோ காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உள்ளிட்ட கட்டமைப்புக்களின் அதிகாரிகளால் எவ்வாறு பிரஸ்தாபிக்கமுடியும் என்றும் த்யாகி ருவன்பத்திரண விசனம் வெளியிட்டுள்ளார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...